உளி பற்றி

ஆன்லைன் உலகில் வழிசெலுத்துவது, ஆஃப்லைன் உலகத்தைப் பிரதிபலிப்பதாக மாறியுள்ளது: அனைத்து பாலினம் மற்றும் பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான பாலினம் சார்ந்த வன்முறை இப்போது பொதுவானது. உளி (ஒரு வகையான சுத்தியல்) என்பது ஆன்லைன் பாலினம் சார்ந்த வன்முறை / ஆன்லைன் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு ஒரு விதமான அதிகாரத்தை ஒப்படைக்கும் எங்கள் முயற்சியாகும். உளி நம் ஒவ்வொருவரையும் சமூக வலைதளங்களில் ஒன்றுகூடி நம்முடைய அனுபவத்தைக் கட்டுப்படுத்த அழைக்கிறது. உளி மூலம், அதிகாரம் உள்ளவர்களிடம் இருந்து அதிக பொறுப்பான மற்றும் செயலூக்கமுள்ள தொழில்நுட்பத்தைக் கோருவதற்கான அடித்தளத்தை நாங்கள் அமைத்துள்ளோம். இந்த பிளகின், நம் ஒவ்வொருவருக்கும் அதிகாரம் அளிக்க பாடுபடும் பல்வேறு குழுக்கள், அமைப்புகள் மற்றும் இயக்கங்களின் முயற்சிகளுக்கு ஒரு அடையாளமாகவும் இருக்கிறது. இணையத்திலும் ஆஃப்லைனிலும் பின்னிப்பிணைந்த ஜாதி, மதம், பாலினம் மற்றும் பாலியல் அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள், சமூகத்தின் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கூட்டு உழைப்பில் இருந்து பிறந்தது. புண்படுத்தும் வார்த்தைகள்/சொற்றொடர்களை வடிகட்டவும், உதவிக்கு எங்கள் நண்பர்களை அழைக்கவும் அல்லது ஆன்லைன் உரையாடல்களை தொடங்கவும், பிரச்சனைக்குரிய ட்வீட்களை காப்பகப்படுத்தவும் அனுமதிக்கும் இந்த பிளகினின் வளர்ச்சிக்கு அவர்கள் பங்களித்துள்ளனர். இந்த பிளகின், இடைவெளிகளை மீட்டெடுக்கும் மற்றும் எங்கள் ஆன்லைன் அனுபவத்தின் கட்டுப்பாட்டை எடுப்பதற்கான எங்களின் திறனை நினைவூட்டுகிறது. உளி ஒரு தயாரிப்பு அல்ல, இது ஒரு எளிய கருவியாகும், இது ஒருவருக்கு சொந்தமாக ஒரு அறையை அல்லது தனி இடங்களை உருவாக்க அனுமதிக்கிறது, அங்கு மக்கள் ஒன்று கூடலாம், கதைகளைப் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் நாம் அனைவரும் பார்க்க விரும்பும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கலாம்.